பேராவூரணி அருகே ஆதனூரில் கொரோனா சிறப்புமருத்துவ முகாம்.!

Scroll Down To Discover
Spread the love

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆதனூரில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு ,வட்டார மருத்துவ அலுவலர் வி.சவுந்தரராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் தாமரைச்செல்வன், முன்னாள் கவுன்சிலர் என். ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் முகாமில், வட்டார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் புண்ணியமூர்த்தி, ராஜேந்திரன், பூவலிங்கம் ,கிராம சுகாதார செவிலியர்
ஜெனிபர்ஜான்சிராணி, லேப் டெக்னீசியன் குமரேசன் குழுவினர் மற்றும் கிராம உதவியாளர் சுரேஷ், மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சேதுபாவாசத்திரம் விவசாய அணி அமைப்பாளர் ஆர். ரத்தினம், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை, சர்க்கரைவியாதி பரிசோதனை ,உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.