சஞ்சீவினி மருத்துவ சேவை திட்டம் : தேசிய அளவில் 2வது இடம் பிடித்த மதுரை மாவட்டம் .!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா ஊடரங்கால் மக்கள் சாதாரண நோய்களுக்கு கூட மருத்துவமனைகளுக்கு செல்ல இயலவில்லை. வீட்டில் இருந்து டாக்டரை அணுக, மருத்துவ ஆலோசனைகளை பெற மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்தது.

அலைபேசி வழியாக டாக்டரின் ஆலோசனைகளை பெற்று, அவரது பரிந்துரைக்கும் மருத்துவ சீட்டை பதிவிறக்கம் செய்து மருந்துகளை வாங்கி கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லா மருத்துவ சேவையை பெறுவது போல, இதிலும் பெறலாம்.

இதில் மருத்துவ ஆலோசனைகளை வழங்க பிரத்யேகமாக டாக்டர்களை சுகாதாரத்துறை நியமித்துள்ளது. இச்சேவையை பயன்படுத்துவதில் தமிழகம் நாட்டில் முதலிடத்தில் உள்ளது. அக்.,7 வரை 1,61,816 நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர். https://esanjeevaniopd.in இணையத்தில் சென்று அலைபேசி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து, மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். இச்சேவையை மக்கள் பயன்படுத்திடலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.