திருவரங்குளம் சிவன் கோவிலில் மதுரை அம்மையப்பர் குழுவினர்உழவாரப் பணி.!

Scroll Down To Discover
Spread the love

புதுகை மாவட்டம் திருவரங்குளத்தில் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீஅரங்குளநாதர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் மதுரை அம்மையப்பர் உழவாரப் பணிகுழுவை சேர்ந்த சிவ பக்தர்கள் 45 பேர் இசக்கியம்மாள் தலைமையில் சத்தியமூர்த்தி, பழனிச்சாமி, ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலையில் கோவில் உழவாரப் பணிகளை மேற்கொண்டனர்.

கோவில் ராஜகோபுரத்தில் உள்ள செடிகளை அகற்றி சுத்தம் செய்து கோவில் வளாகம் கோவில் பிரகாரம் ஆகிய பகுதிகளில் சுத்தம் செய்தல் கற்சிலைகள் பீடங்கள் வளைவுகள் எண்ணெய் விளக்குகள் கோயில் பாத்திரங்களை சுத்தம் செய்து உழவாரப் பணிகளை மேற்கொண்டனர்.

இக்குழுவை சேர்ந்த சிவ பக்தர்கள் கடந்த சில வருடங்களாக மாதம் ஒரு சிவன் கோயிலை தேர்வு
செய்து உழவாரப்பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.