அனைத்து ஊரக வீடுகளுக்கும் தண்ணீர் வசதி தந்து நாட்டிலேயே முதல் மாநிலமாக கோவா சாதனை.!

Scroll Down To Discover
Spread the love

அனைத்து ஊரக வீடுகளுக்கும் தண்ணீர் வசதி தந்து நாட்டிலேயே முதல் மாநிலமாக கோவா சாதனை

அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் என்ற திட்டத்தின் கீழ் மொத்தம் உள்ள 2.30 லட்சம் வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தந்து கோவா மாநிலம் சாதனை.

ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ள மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கோவா மாநிலத்தின் ஊரக வீடுகள் அனைத்திற்கும் தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பிரமோத்ஸவந்த் அறிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தின் இந்த அமைதி புரட்சியானது பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் வழங்கப்படுவது மிக அவசியமானதாகும். அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்குவது மத்திய அரசின் முக்கிய நோக்கம் என்று மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.