தமிழக பாஜக தலைவர் முருகன் மாநிலம் முழுதும் சுற்றி வரும் வகையில் யாத்திரை செல்ல உள்ளார். நவம்பர் 6ம் தேதி ‘வெற்றிவேல் யாத்திரை’யை திருத்தணியில் துவங்கி டிச. 6ல் திருச்செந்துாரில் நிறைவு செய்கிறார். யாத்திரை அடையாள சின்னம் மற்றும் பாடலை நேற்று பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் வெளியிட்டார்.
https://twitter.com/BJP4TamilNadu/status/1314554502926626816?s=20
பின்னர் அவர் கூறியதாவது: ‘வெற்றிவேல் யாத்திரை’ தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும். கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய ‘கருப்பர் கூட்டம்’ பிரச்சனையில் கைது செய்யப்பட்டவர் தி.மு.க. – ஐ.டி. அணியில் இருந்தவர். ஹிந்துக்கள் மனதை புண்படுத்துவது தி.மு.க.விற்கு வாடிக்கையாக உள்ளது. இதை மக்களிடம் எடுத்து சொல்லவும் கருப்பர் கூட்டத்திற்கு தக்க பாடம் புகட்டவும் ‘வெற்றிவேல்’ யாத்திரையை திட்டமிட்டுள்ளோம்.
https://twitter.com/BJP4TamilNadu/status/1314459587920101376?s=20
புதிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்களை மக்களிடம் எடுத்து செல்ல கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு 90 இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயித்துள்ளோம். 35க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெற்றுள்ளோம். நாங்கள் கை காட்டுபவர்கள் ஆட்சி தான் அமையும். இவ்வாறு முருகன் கூறினார்.
அரசியல்
October 10, 2020

Leave your comments here...