நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

Scroll Down To Discover
Spread the love

நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை ஆட்சேபித்து மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இத் திட்டம் தொடர்பாக பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்தபிறகே, அரசு அலுவலகங்களில் இத் திட்டம் செயல்படுத்த வேண்டும், என மதுரை மாவட்ட அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஜெ. மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நீதி ராசா முன்னிலை வகித்தார்.பொதுச் செயலாளர் முருகையன், மாநில பொருளாளர் மா. விஜயபாஸ்கர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். பொதுச் செயலர் செல்வம் நிறைவுரை ஆற்றினார்.