மாற்றுத்திறனாளிகளுக்கு நடமாடும் காதி விற்பனை வண்டிகளை வழங்கிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!

Scroll Down To Discover
Spread the love

மத்திய குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி , மாற்றுத்திறனாளிகளுக்கு நடமாடும் காதி விற்பனை வண்டிகளை வழங்கினார்.

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று தமது நாடாளுமன்ற தொகுதியான நாக்பூரில் மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆத்மநிர்பா் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் நடமாடும் காதி விற்பனை வண்டிகளை விநியோகித்து மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து உன்னத முயற்சியைத் தொடங்கி வைத்தார்.

காணொலி காட்சி மூலம் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இ-ரிக்ஷாக்களை திரு.கட்கரி வழங்கினார். இந்த பயனாளிகள் காதி துணிகள், காதி ஆயத்த ஆடைகள், உணவுப் பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றும் இதர உள்ளூர் தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காதி பொருட்களை அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று விற்பனை செய்ய முடியும்.

அடுத்த சில நாட்களில் இன்னும் ஐந்து நடமாடும் காதி வண்டிகள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 500 நடமாடும் விற்பனை வண்டிகளையாவது வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நிதின்கட்கரி கூறினார்.