நாடு முழுவதும் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்..!

Scroll Down To Discover
Spread the love

நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம் 2007 இன் பிரிவு 10(2)-ன் கீழ் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளும் இந்தியாவில் உள்ள ஏ.டி.எம் மற்றும் பாயிண்ட் ஆப் சேல் (Point of Sale ) இயந்திரங்களில் மட்டுமே உபயோகிக்க முடியும். வெளிநாடுகளில் பயன்படுத்த வேண்டுமெனில் வங்கியில் அனுமதியைப் பெற வேண்டும். மேலும், பணம் பரிவர்த்தனை வரம்பை வாடிக்கையாளர்களே அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

புதிய சேவைகளை தேர்வு செய்வது அல்லது விலகுவது ஆன்லைன் பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் உள்ளிட்டவற்றிற்கும் வாடிக்கையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் இனி 24 மணிநேரமும் மொபைல் செயலிகள், இணையவழி வங்கி சேவை, ஏடிஎம் இயந்திரம், ஐவிஆர் கால் சேவைகளின் மூலம் பரிவர்த்தனை வரம்புகளையும் மாற்ற முடியும். இந்த புதிய விதிமுறைகள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வருகிறது.