இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் மறைவு – மதுரை ஆதீனம் இரங்கல் !

Scroll Down To Discover
Spread the love

இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் மறைவிற்கு மதுரை ஆதீனம் இரங்கல். இந்து முன்னணி நிறுவனர் திரு. இராம. கோபாலன் அவர்கள் ஆற்றிய சமயத் தொண்டு எவராலும் மறக்க இயலாது.

1981 தென்காசி மீனாட்சிபுரம் மதமாற்றப் பிரச்சனை, 1982 குமரி மாவட்டம் மண்டைக்காடு பிரச்சனை போன்ற முக்கிய நிகழ்வுகளில் திரு. இராம. கோபாலன் அவர்களின் பணிகள் குறிப்பிடத் தகுந்தவை. 94 ஆம் வயதில் பரிபூரணம் ஆன அவர் ஆன்மா சாந்தி பெற்று, விண்ணுலகில் இறைவன் சன்னிதானத்தில் நிம்மதியுடனும, மகிழ்ச்சியுடனும் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். இவ்வாறு மதுரை ஆதீனம் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.