உக்ரைனில் ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் பலி..!

Scroll Down To Discover
Spread the love

உக்ரைனில் ராணுவ விமானம் ஒன்று தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் பலியாகினர். விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான “அன்டோனோவ் அன் 26” ரக விமானம் சுஹூவ் நகரில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.விமானத்தில் விமானப்படை வீரர்கள் 20 பேரும், விமானி உட்பட விமான ஊழியர்கள் 7 பேரும் பயணம் செய்தனர்.

புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விமானத்தின் 2 என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்தது. இதனை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரை இறக்க முடிவு செய்தார்.


அதன்படி ராணுவ விமான நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க அவர் முயற்சித்தார்.ஆனால் அதற்குள் அவரது கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையோரம் உள்ள புதரில் விழுந்தது. தரையில் மோதிய வேகத்தில் விமானத்தில் தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் விமானப்படை வீரர்கள் 2 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த கார்கிவ் பிராந்தியத்துக்கு இன்று அவர் நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.