எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா

Scroll Down To Discover
Spread the love

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றி வழிபட்டு அஞ்சலி செலுத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், 74, சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் இன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அரசு காவல்துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார் எஸ் பி பாலசுப்ரமணியம். அவரது ரசிகர்களும் திரை உலக பிரபலங்களும் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்து அனுப்பினர்.

எஸ்.பி.பி. மறைவுக்கு ஏற்கனவே இளையராஜா இரங்கல் தெரிவித்து இருந்தார். அதில் எஸ்.பி.பி. இல்லாத உலகம் தனக்கு சூன்யமாக தெரிவதாக கூறியிருந்தார். இந்நிலையில் எஸ்.பி.பி.யின் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலை ரமணா ஆசிரமத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாட்டார் இளையராஜா. இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.