முன்னாள் ராணுவத்தினருக்கு ஏராளமான உதவித் திட்டங்கள்: மத்திய அமைச்சர் தகவல்

Scroll Down To Discover
Spread the love

முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக, மீள்குடியேற்ற தலைமை இயக்குனரகம் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாதுகாப்பு ஏஜன்சிகள், பெட்ரோல் பங்குகள், கேஸ் நிலையங்கள், கேஸ் சிலிண்டர் ஏஜென்ஸி ஒதுக்கீடு, தில்லியில் பால் பூத்கள், காய்கறி மற்றும் பழக்கடைகள் ஒதுக்கீடு போன்றவை செய்து கொடுக்கப்படுகின்றன.

மக்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: முன்னாள் ராணுவத்தினர்/ விதவைகள்/ போர் விதவைகள்/ அவர்களின் குழந்தைகளுக்கும் ஏராளமான நிதியதவிகளை கேந்திரிய சைனிக் வாரியம் செய்கிறது.ஓய்வூதியம் பெறாத ஹவில்தார் அந்தஸ்து வரையிலான வீரர்களுக்கு 65 வயதுக்கு மேல் மாதம் ரூ.4,000 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. முதல் 2 குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000/- வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000/- வழங்கப்படுகிறது. வீடு பழுதுபார்ப்பு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.ஹவில்தார் அந்தஸ்து வரையிலான முன்னாள் வீரர்களின் முதல் 2 மகள்களின் திருமண நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்டுகிறது.இறுதி சடங்குக்கு ரூ.5000/- அளிக்கப்டுகிறது.

மருத்துவ சிகிச்சைக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வழங்கபடுகிறது.ராணுவத்தினர் வீரர்கள் முதல் அதிகாரிகள் வரை அவர்களின் குழந்தைகளுக்கு திருமணம் ஆகும் வரை ரூ.1000/- வழங்கப்படுகிறது. விதவைகளின் தொழிற்பயிற்சிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. போரில் இறந்த ராணுவ வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரூ.25 லட்சம் நிதி மற்றும் இந்திரா காந்தி நகர் பரியோஜனாவில் 25 பிகாஸ் நிலம் அல்லது ரூ.25 லட்சம் நிதி மற்றும் எம்ஐஜி வீட்டு வசதி வாரிய இல்லம் அல்லது ரூ.50 லட்சம் பணம்.

ராணுவ வீரர்களுக்கு 1,86,138 குண்டு துளைக்காத உடைகள், 1,58,279 கவச ஹெல்மெட்டுகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் முறையே கடந்த 2018 மற்றும் 2016ல் முடிவடைந்தது.தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், 101 ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி, இவற்றை நாட்டில் உள்ள படைகலன் பொருட்கள் உற்பத்தி வாரிய ஆலைகள் மற்றும் தனியார் ஆலைகள் தயாரிக்கும்.அம்பான், நிஷர்கா போன்ற புயல் சமயத்தில் மீனவர்களின் உயிரை காக்கவும், புயல் பாதிப்புகளைக் குறைக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய கடலோர காவல் படையின் 6 கப்பல்கள் மற்றும் டோர்னியர் ரக விமானங்கள் மேற்கொண்டன. நிஷர்கா புயல் சமயத்தில் 2354 மீன்பிடி படகுகளை, இந்திய கடலோர காவல்படை கரை சேர்த்தது.