டீ கடைக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள் : சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை.!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ளது கூமாப்பட்டி. இங்குள்ள தைக்கா தெரு பகுதியில், நேற்று இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் ரகளை செய்தனர்.

அருகிலிருந்தவர்கள் கண்டித்ததை தொடர்ந்து இரண்டு வாலிபர்களும் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் நேற்று நள்ளிரவு நேரம், முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு வந்த இரண்டு பேர், அந்தப்பகுதியில் இருந்த ஜலால் என்பவரின் டீ கடைக்கு தீ வைத்துள்ளனர்.


அப்போது அங்கு ஆட்கள் வருவதைப் பார்த்த மர்ம ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர். அருகிலிருந்தவர்கள் உடனடியாக டீக்கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து கூமாப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து, மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.