விவசாயிகளின் நலனுக்காக தென்னிந்தியாவில் இருந்து டில்லிக்கு முதல் கிசான் சிறப்பு ரயிலை – இந்திய ரயில்வே இயக்கம்

Scroll Down To Discover
Spread the love

தென்னிந்தியாவில் அனந்தபூர் முதல் புது டில்லி வரையான முதல் கிசான் ரயிலை இந்திய ரயில்வே செப்.,9 இயக்கியுள்ளது. இந்த ரயில் நாட்டில் இரண்டாவது மற்றும் தென்னிந்தியாவின் முதல் கிசான் ரயில் ஆகும். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டு ரயிலை துவக்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு ரயில்வே மாநில அமைச்சர் சுரேஷ் சி அங்கடி வீடியோ இணைப்பு தலைமை தாங்கினார். இது அனந்தபூர் நகரத்தில் இருந்து 322 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை டில்லியில் உள்ள ஆதர்ஷ் நகருக்கு எடுத்துச் சென்றது.


இந்திய அரசின் இந்த கிசான் சிறப்பு ரயிலால் ஆந்திராவின் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்களது பொருட்களை அனுப்புவதன் மூலமாக பெரிதும் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.

அவர்களின் தயாரிப்புகள் டில்லியின் சந்தைகளை நேரடியாக அடைய முடியும், மேலும் அவற்றின் தயாரிப்புக்கு நல்ல விலை கிடைக்கும். விவசாயிகளுடன் வணிகர்களும் இந்த ரயிலை இயக்குவதால் பயனடைவார்கள். அவர்கள் தங்கள் பொருட்களை டெல்லியின் சந்தைகளுக்கு விரைவாக கொண்டு செல்ல முடியும்.புதிய சந்தைகளுக்கு விலை பொருட்களை இந்த ரயில்களால் கொண்டு செல்வதன் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது. சாலையுடன் ஒப்பிடும்போது, கிசான் ரயில் வழியாக பொருட்களை அனுப்பும்போது இழப்பு குறைவாக இருக்கும். ரயிலில் பொருட்கள் மிகவும் கவனமாக வைக்கப்படுகின்றன. சாலையிலிருந்து பொருட்களை அனுப்புவதோடு ஒப்பிடுகையில், இந்த ரயில் மூலம் பொருட்களை அனுப்புவதில் குறைந்த கட்டணத்தில் பொருட்கள் விரைவாக வந்து சேரும்