மதுரையில் தொடங்கிய சுவரொட்டி போர்…!

Scroll Down To Discover
Spread the love

மதுரையில் கடந்த சில நாட்களாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி சில மாதங்கள் மௌனம் காத்தத்துடன், அவரது ஆதரவாளர்களும் அமைதியாகவே இருந்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கடந்த சில நாட்களாக, தனது ஆதரவாளர்கள், கட்சி நண்பர்களின் திருமண நிகழ்ச்சியிலும் ஆர்வமாக பங்கேற்று வருகிறராம்.இதுவரை அமைதி காத்த அழகிரியின் ஆதரவாளர்கள், உற்சாகப்படுத்தும் வகையில், மதுரை நகரில் பல இடங்களில் தென் தமிழகத்தை ஆளப்போகும் மதுரையே என வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.