மாமன்னர்களை சமூக வளைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி விடுதலைகளம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!

Scroll Down To Discover
Spread the love

சமூக வளைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி விடுதலைகளம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைதியான தமிழகத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் அரசியல் சட்டத்திற்கு புறம்பாக சாதிய பிரிவினை பேசி சமூக வலைதளங்களில் சாதிய மோதல்களை தூண்டுகிற கருத்துக்களை பரப்புவோர் மீது,
குறிப்பாக தமிழகத்தில் பன்னெடுங்காலமாக தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் நாயுடு நாயக்கர் சமுதாயத்தையும் அச்சமுதாயத்தில் பிறந்து இந்த மண்ணிற்காக வாழ்ந்து இன்னுயிர் நீத்த இந்திய சுதந்திரத்திற்காக முதல் குரல் எழுப்பிய மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனார் அவர்களையும் மதுரை மாநகரை அழகுடன் வடிவமைத்து தென்தமிழகத்தில் இந்து சமயத்தை தழைத்தோங்க வைத்த மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களையும் இழிவாக பேசியும் அவர்கள் குறித்து வரலாற்று உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பியும் வருகிறவர்கள் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டித்தும் உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் முற்றுகை போராட்டம் விடுதலைக்களம் சார்பில் விடுதலைக்களம் நிறுவனத் தலைவர் கொ நாகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தெலுங்கு சம்மேளன மாநில தலைவர் வெ. வேங்கடவிஜயன் முன்னிலை வகித்தார். தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் கே.சி. திருமாறன் ஜி தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார்.தேசிய செட்டியார் பேரவை நிறுவனத்தலைவர் பி.எல்.ஏ . ஜெகநாத் மிஸ்ரா முடித்து வைத்து சிறப்புரையாற்றினர். தமிழ் மாநில நாயுடு பேரவை நிறுவனத் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி நாயுடு, தமிழ்நாடு கம்மா நாயுடு எழுச்சி பேரவை மாநிலத் தலைவர் எஸ். செல்வராஜ், விஜய நகர புரட்சி படை நிறுவனர். வைகை பாண்டியன், நாயுடு மகாஜன சங்க மாநில பொருளாளர் *டாக்டர் சன்னாசி, வெலம நாயுடு சங்க மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கட்ட ராமன், தமிழக வெலம நாயுடு இளைஞர் எழுச்சி பேரவை தலைவர் ஏ. காளிதாஸ் மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் என். சிவன்ராஜ் நாயக்கர், நாயுடு மகாஜன சங்க மதுரை மாவட்ட தலைவர் சப்னா மகாராஜன், தமிழக நாயுடு நாயக்கர் பேரவை மாநில இளைஞர் அணித்தலைவர் எஸ்.எஸ்.பிரேம்குமார், நாயக்கர் நாயுடு பேரவை நிறுவனத் தலைவர் மெய். தனபாலன், தொழுவா நாயக்கர் மகாஜன சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ. கட்டபொம்மு ராஜா, மாமன்னர் திருமலை நாயக்கர் பண்பாட்டு கழக நிறுவனத் தலைவர் வி.கே. சுந்தர்ராஜன், தெலுங்கர் மகாஜன சங்க மாநிலத்தலைவர் ஜி.வி. பாலமுகருகன், தமிழ்நாடு இளைஞர்கள் சங்க விருதுநகர் மாவட்டத்து தலைவர் விக்னேஷ்குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கை குறித்தான கோரிக்கை மனு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது