சென்னையில் 5 மாதத்திற்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை.!

Scroll Down To Discover
Spread the love

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, இன்று காலை முதல் ரயில் சேவை இயக்கம் தொடங்கியுள்ளது. காலை 6.10 மணி அளவில் கோவையை நோக்கி முதல் ரயில் இயங்கத் தொடங்கியது. ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகள் கொடுக்கப்படுவதில்லை எனவும் முன்பதிவு செய்துள்ள பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன.ரயில் நிலையம் வரக்கூடிய பயணிகள் பயண நேரத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வந்து உடல் வெப்ப சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6ம் எண் வாயில் வழியாக மட்டுமே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். நடைமேடை எண் 10 மற்றும் 11 ஆகியவற்றில் இருந்து ரயில் இயக்கப்படுகின்றன.

முதல்கட்டமாக தினசரி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை இயக்கப்படுகிறது. முதல்நாளான இன்று காலை 8 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நிலையில் 7 மணியளவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மெட்ரோ ஏற்பாடுகளை ஆய்வு செய்து, 5 மாதங்களுக்கு பிறகு மெட்ரோவின் முதல் பயணத்தை தொடக்கி வைத்தார். அடுத்தக்கட்டமாக செப்.,9 முதல் சின்ன மலையிலிருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான மெட்ரோ சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.