சிக்கிமில் வழிதப்பிய சீன மக்களை காப்பாற்றி இந்திய ராணுவம் – குவியும் பாராட்டுகள்

Scroll Down To Discover
Spread the love

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் கடந்த மே மாதம் ஊடுருவியதில் இருந்து இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது. இதில் ஜூன் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் நிகழ்ந்தது.

இந்த தருணத்தில் வடக்கு சிக்கிமின் பீடபூமி பகுதியில் 17,500 அடி உயரத்தில் 03 செப்டம்பர் அன்று வழி தவறிய மூன்று சீன மக்களுக்கு இந்திய ராணுவம் உதவிக்கரம் நீட்டியது.

பூஜ்ஜியத்துக்கும் குறைவான குளிரில் அவர்கள் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்த இந்திய வீரர்கள், இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரை உள்ளடக்கிய மூன்று சீனர்களைச் சென்றடைந்து அவர்களுக்கு உயிர் வாயு, உணவு, கதகதப்பான உடைகள் மற்றும் மருத்துவ உதவிகளை அளித்தனர்.

அவர்கள் சென்று சேர வேண்டிய இடத்துக்கான சரியான வழிகாட்டுதலை இந்திய வீரர்கள் அளித்த நிலையில், மூவரும் அங்கிருந்து கிளம்பினர். சரியான நேரத்தில் உதவியதற்காக இந்திய ராணுவத்துக்கு சீனர்கள் நன்றி தெரிவித்தனர்.