மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தருக்கு இலவச லட்டு பிரசாதம் – தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டம் மீண்டும் தொடக்கம்..!

Scroll Down To Discover
Spread the love

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 5 மாதங்களாக கொரோனா ஊரடங்கால் தரிசனத்திற்கு தடை விதிக்கபட்ட நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கட்டுள்ளது.

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில்,இன்று முதல் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது, சிறப்பு கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாக பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அம்மன் சன்னதி வழியாக வந்து பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.