நடுநிலை பேசுவோர்.! மதநல்லிணக்கம் பேசுவோர் – ஒருவர் கூட அருன் படுகொலை சம்பவத்தை கண்டிக்கவில்லை- அர்ஜூன் சம்பத்

Scroll Down To Discover
Spread the love

நடுநிலை பேசுவோர் – மதநல்லிணக்கம் பேசுவோர் – ஒருவர் கூட இந்து இயக்கத் தொண்டர் அருண் படுகொலை சம்பவத்தை கண்டிக்கவில்லை என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகரப்பகுதி கள்ளர் தெருவில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடியதற்காக இந்து அமைப்புகளின் தொண்டர்கள் திரு அருண், திரு. யோகேஷ் ஆகியோர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதில் அருண் படுகாயமுற்று உயிரிழந்திருக்கிறார். திரு.யோகேஷ் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரும் எஸ்டிபிஐ, பி.எப்.ஐ,அமைப்பைச் சார்ந்தவர்கள் ராமநாதபுரம் நகரப்பகுதியில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கம் எப்பொழுதும் நிலவி வருகிறது. தமிழக அரசும் காவல்துறையும் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளை கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் PFI,SDPI, உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்ய வேண்டும். ஏற்கனவே ஜிம் ராமலிங்கம் படுகொலை வழக்கில் தொடர்புடைய இந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன் விளைவைத்தான் இன்று நாம் ராமநாதபுரத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.நடுநிலை பேசுவோர் மதநல்லிணக்கம் பேசுவோர் ஒருவர் கூட இந்த படுகொலை சம்பவத்தை கண்டிக்க முன்வரவில்லை. உயிரிழந்துள்ள திரு அருண் குடும்பத்தாருக்கு எங்கள் அஞ்சலிகளையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசும் காவல்துறையும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்ற திரு யோகேஷ் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கிட வேண்டும்.இரண்டு குடும்பத்தாருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.உயிரிழந்துள்ள திரு அருண் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்தும் SDPI, PFI, உள்ளிட்ட இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்களை தடை செய்யக் கோரியும் தமிழகம் முழுக்க இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.