உள்நாட்டிலேயே ரூ.55,000 கோடியில் நீர்மூழ்கி கப்பல் தயாரிக்க இந்தியா திட்டம்..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் ஆறு நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சீனா, தன் கடற்படையின் வலிமையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, ராணுவ அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், ஆறு நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.’புராஜெக்ட் 75′ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு, 55 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியுடன், இந்த நீர்மூழ்கி கப்பல்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன.இதற்கான ஆரம்பகட்ட பணிகள் முடிந்துவிட்டன.

இந்த நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கான டெண்டர், அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும்.நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க, இரண்டு இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஆறு நிறுவனங்களை, ராணுவ அமைச்சகம் தேர்வு செய்து உள்ளது.