பிரதமர் மோடி பிறந்த நாள்- சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு.!

Scroll Down To Discover
Spread the love

இந்திய பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தனது 70-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் செப்டம்பர் 14 முதல் 20 ம் தேதி வரையில் ஒரு வாரம் சேவை வாரமாக கொண்டாடப்பட உள்ளது.

அந்த வாரம் முழுவதும் கட்சியினர் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகளில் பாஜக தொண்டர்கள் ஈடுபட உள்ளனர். 70-வது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில், மண்டல வாரியாக 70 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல், 70 பார்வையற்றவர்களுக்கு கண்ணாடிகள் ஆகியவையும் வழங்க பாஜக திட்டமிட்டுள்ளது.