சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்…சீற்றம் குறைவதுண்டோ- ரஜினி ரசிகர்..!

Scroll Down To Discover
Spread the love

மதுரையில் ரஜினி ரசிகர் ஒருவருக்கு விபத்தில் காலை இழந்தாலும், பிழைப்புக்காக டிரை சைக்கிளில் மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே பழ வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் ரஜினியின் முரட்டு பக்தன் ஆவார். இதனால், இவர் ராஜா சின்னரோஜா படத்துக்கு இரு சக்கரவாகனத்தில் பயணித்தபோது விபத்தில் காலை இழக்க நேரிட்டது.

இருந்தபோதிலும், குடும்பத்தை காப்பாற்ற எண்ணியபோதுதான், தூத்துக்குடி மாவட்ட ரஜினி மன்றச் செயலாளர் ஸ்டாலின், இவருக்கு, செயற்கை காலை அளித்தத்துடன், பிழைப்புக்கு டிரை சைக்கிளையும் அளித்து இவரை ஊக்கப்படுத்தியுள்ளார்.

ரஜினி பாண்டி கூறுகையில், மனதில் உறுதியிருந்தால் ஊனம் ஒரு தடையில்லை. நான் தொடர்ந்து ரஜினி ரசிகனவே இருப்பேன் என்றார், ரஜினி பாண்டி.