ஏழை எளிய மக்களுக்கு தேடிச் சென்று இலவசமாக முககவசங்களை வழங்கி வரும் மதுரை மாநகர போலீசார்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா முகக் கவசம் அணியாமல் வெளி இடங்களுக்கு வருபவர்களுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மூலமாக பல்வேறு வழிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வுகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து மதுரை மாநகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கி அவர்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.