உசிலம்பட்டி அருகே பயிர்களில் வெட்டுக்கிளி தாக்கம்: அமைச்சர் ஆய்வு

Scroll Down To Discover
Spread the love

உசிலம்பட்டி வட்டம் புத்தூர் கிராமத்தில் மாட்டுத் தீவணத்திற்காக விதைக்கப்பட்டிருந்த பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியதை மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார்.

இது குறித்து அமைச்சர் தெரிவிக்கையில்:- புத்தூர் கிராமத்தில் அரை ஏக்கர் நிலத்தில் மாட்டுத் தீவணத்திற்காக விதைக்கப்பட்டிருந்த பயிர்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதலை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலோடு, வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு தக்க அறிவுரைகளை வழங்கி வெட்டுக்கிளிகளுடைய நிலையை அறிந்து மருந்து தெளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். விவசாயிகள் இப்பயிரை மாட்டுத்தீவனத்திற்கு பயன்படுத்த வேண்டுமென்பதால் வேப்பெண்ணெய்யை மருந்தாக பயன்படுத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோளினை ஏற்று வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இவை நாட்டு வெட்டுக்கிளிகள் என்றும் இவற்றுடைய வளர்ச்சியையும்ää பரவலையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படியும், துணை முதலமைச்சர் அறிவுரையின்படியும் நாடாளுமன்ற உறுப்பினர் , சட்டமன்ற உறுப்பினர் காவல்துறை அதிகாரிகளும் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். வெட்டுக்கிளி பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வேளாண்மைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். மருந்து தெளிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட பயிர்களைச் சுற்றி வலையை பயன்படுத்திப பிற பகுதிகளுக்கு பரவாமலிருக்க செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மூன்று மாதங்களுக்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வெட்டுக்கிளிகள் பரவியபோதும் நமது அதிகாரிகள் எல்லையோர மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.

தற்போது இங்குள்ள வெட்டுக்கிளிகள் வயல் வரப்புகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் நாட்டு வெட்டுக்கிளிகள் எனவே இதனால் பாதிப்பு ஏற்படவாய்ப்பில்லை அவற்றுக்குறிய உணவு பற்றாக்குறையினால் இப்பயிர்களை தாக்கியுள்ளது என்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும் ,தொடர் கண்காணிப்பில் ஈடுபட அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ,பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை. விவசாயிகளுடைய கோரிக்கையை ஏற்று மாண்புமிகு அம்மாவின் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.