பொது மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள்: அமைச்சர் செல்லூர் கே. ராஜூ.!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களையே, அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.

மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறையில் பொது மக்களுக்கு கொரோனா நிவாரனப் பொருட்களை அவர் வழங்கி பேசியது: தமிழகத்தை பொறுத்தவரை சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை ஒரு பெரிய நகரமாக விளங்கி வருகிறது.வணிகத்திலும், தொழில்களிலும் மதுரை முன்னேறி வருவதை காணமுடிகிறது. மதுரையை பொறுத்த கட்டுபாடுகள் அதிகம் உள்ளதால், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், மதுரை மாநகராட்சி சார்பில் பரிசோதனை அதிகம் செய்யப்படுவதாலும், நோயின் தாக்கம் குறைந்து வருகிறது. அரசு பல திட்டங்கள் கொண்டு வந்தாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு என்பது முக்கியம்.

தமிழக முதல்வர் மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார் என்றார்.இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ்.பாண்டியன், நகர அதிமுக பொருளாளர் ஜெ. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்