கொரோனா நேரத்தில் நகராட்சி துப்புரவு பணியாளரின் சேவையை பாராட்டி பள்ளி சுதந்திர தின விழாவில் கொடியேற்ற செய்து பெருமைபடுத்திய பள்ளி தலைமையாசிரியர்..!

Scroll Down To Discover
Spread the love

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவில் நகராட்சி துப்புரவு பணியாளர் பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கொடியேற்றி கடலை மிட்டாய் வழங்கினார்.

ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தமிழக அரசின் பள்ளி கல்வி துறை செயல் முறைகளில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன் களப் பணியாளர்களான துப்புரவு பணியாளர்களின் சேவையை பாராட்டும் பொருட்டு அவர்களை விழாவிற்கு வரவழைத்து சிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

அதனடிப்படையில் தேவகோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர் பழ.முனியாண்டி பள்ளி சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கொடி ஏற்றி பேசினார். ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது.

இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கும், சுதந்திர தின விழா,குடியரசு தின விழா என அனைத்து விழாவிற்கும் சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.