கொரோனா கோவாக்சின் தடுப்பூசியை டில்லி எய்ம்சில் நாளை பரிசோதனை.!

இந்தியா

கொரோனா கோவாக்சின் தடுப்பூசியை டில்லி எய்ம்சில் நாளை பரிசோதனை.!

கொரோனா கோவாக்சின் தடுப்பூசியை  டில்லி எய்ம்சில் நாளை  பரிசோதனை.!

கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த, பாரத் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதலுடன், ‘கோவாக்சின்’ என்ற தடுப்பு மருந்தை அந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்தை, ஹரியானா மாநிலம், ரோதக்கில் உள்ள பி.ஜி., மருத்துவமனையில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து பார்க்கும் நடவடிக்கை துவங்கியுள்ளதாக, ஹரியானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக மூன்று பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டதாகவும், மூன்று பேரும் இதற்கு முழுமையாக ஒத்துழைத்ததாகவும், அவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த கட்ட முயற்சியாக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நாளை (ஜூலை 20) மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க உள்ளது.

மேலும் 18 முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான 100 பேரிடம் கோவாக்சின் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்- 07428847499 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது எஸ்எம்எஸ் செய்யவும்.
ctaiims.covid19@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்.என தெரிவிக்கப்பட்டு உள்ளது

Leave your comments here...