பரிந்துரை கடிதம் வாங்கிய பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு : தனிமைப்படுத்தப்பட்டார் கடலூர் திமுக எம்.பி.

Scroll Down To Discover

கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையத்தை சேர்ந்த 64 வயது பெண் புற்றுநோய் சிறுநீரகம் பாதிப்பால் ஏப்ரல் 15ல் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று 22ல் வீடு திரும்பினார். மீண்டும் உடல்நிலை பாதித்ததால் புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற கடலுார் தொகுதி தி.மு.க. – எம்.பி. ரமேஷிடம் அப்பெண்ணின் மகன் ஏப். 25ல் சிபாரிசு கடிதம் பெற்றுச் சென்றார். மறுநாள் அப்பெண் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சென்னையிலிருந்து வந்ததை அறிந்து அப்பெண்ணுக்கும் உடன் சென்ற இருவருக்கும் கொரானோ வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 20 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது.

கொரோனா பாதித்தவரின் மகன் சிபாரிசு கடிதம் பெற்றுச் சென்றதால் கடலுார் எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜன் டிரைவர் சுப்ரமணியன் உள்ளிட்ட நான்கு பேருக்கும் கொரோனா பரிசோதனைக்கு உமிழ்நீர் மாதிரி எடுத்துச் சென்றனர். எம்.பி. உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு ‘தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டது. ஆபத்திற்கு உதவுவதற்காக பரிந்துரை கடிதம் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.