இந்தியாவில் ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, ஊரடங்கை, அடுத்த மாதம், 3ம் தேதி வரை நீட்டிப்பதாக, பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில், வரும், 20ம் தேதிக்குப் பின், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாகவும், பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
https://twitter.com/PIBHomeAffairs/status/1250284039048556545?s=20
ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம்.
மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும்
ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். ஆனால், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.
ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி
ஏப்ரல் 20க்கு பின் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.
முன்னதாக கொரோனா தடுப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. எண் 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடக்க இந்த கூட்டத்தில் ஊரடங்கின் போது விதிவிலக்கு அளிக்கவுள்ள தொழில்கள் மற்றும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
Leave your comments here...