மருந்துப்பொருள் ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்கிய இந்தியாவுக்கு நன்றி – பிரதமர் மோடியை பாராட்டிய டிரம்ப்

உலகம்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்த சில மணி நேரத்திலேயே மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோ குயின் உள்பட்ட 22 வகையான மருந்துப்பொருட்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு இந்தியா நீக்கியது.

இதையடுத்து இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்து டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி:

”அசாதாரண நேரங்களில் நண்பர்களுக்கு இடையே மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் விவகாரத்தில் முடிவெடுத்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இதை மறக்க முடியாது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் உறுதியாக உள்ள இந்தியாவுக்கும், இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி” என அவர் பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...