கொரேனா வைரஸ் தாக்கத்தை கட்டுபடுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊருக்குள் கடைகள் எல்லாம் அடைத்திருக்க, செருப்பு வாங்க போவதாக விளக்கம் அளித்த டிப்ளமோ என்ஜீனியரான தம்பி, முககவசம் உள்ளிட்ட எந்த ஒரு முன் எச்சரிக்கையையும் பின்பற்றாமல் இரு சக்கர வாகனத்தில் ஊருக்குள் சுற்றியதோடு, அதை கண்டித்த பெண் போலீசாரிடம் வீதியில் நின்று, வீம்புக்கு உலக அரசியல் தொடங்கி, உள்ளூர் அரசியல் வரை முழங்கியதால், மண்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
https://youtu.be/pvz2itae9kI
என் ஊர் என்னோட கோட்டை இப்படித்தான் சுற்றுவேன், உத்தரவு போட்ட முதலமைச்சரை வரசொல் என்று போலீசாரிடம் நெஞ்சுவிடைக்க முழங்கும் அந்த தம்பி பெண் போலீசாரிடம் சவால் விடும் வகையில், வீரவசனம் முழங்கியதால், அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்ற காவல்துறையினர் முட்டிவைத்தியம் செய்து அனுப்பி வைத்தனர்.
Leave your comments here...