சென்னை தியாரகராய நகர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில மைய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பொன் ராதாகிருஷ்ண, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த ஹெச்.ராஜா பேசுகையில்:- கோயில் நிலங்களை வீடில்லாதவர்களுக்கு வழங்க கூடாது எனவும், கோயில் நிலங்கள் அரசு நிலங்கள் அல்ல எனவும் கூறினார்.இந்து அறநிலையத் துறை என்பது இந்து மத அறம் அழிக்கும் துறையாக கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கோயில் நிலங்களை ஆக்கிரமிக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? தேவாலயங்கள் மசூதிகளில் வெறும் 6 ஏக்கரை அரசு தொட முடியுமா? கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் இந்து மத உணர்வாளர்கள் ஒன்றிணைய வேண்டும்.
https://twitter.com/JananesaN_NewS/status/1234802087470362624?s=20
அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் அனைத்து சொத்துகளும் 6 வார காலத்திற்குள் பட்டியலிட்டு, கோயிலின் நேரடி நிர்வாகத்தில் எவை இருக்கின்றன எந்தெந்த கோயில் சொத்துகள் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன, எந்தெந்த கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன என்ற பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என, 2018-ல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்து அறநிலைய துறை அதிகாரிகளுக்கு வழங்கும் சம்பளம் வீண் செலவு என விமர்சித்த அவர், இந்து கோயில்களை பாதுகாக்க முடியாத போது எதற்கு அறநிலையத்துறை? எனவும் கேள்வி எழுப்பினார்.
 

														
														
														
Leave your comments here...