மேற்கு வங்கம்  கோல்கட்டாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் மாபெரும்  பேரணி நடைபெற்றது. இதில் மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
https://twitter.com/AmitShah/status/1234077258169454593?s=20
இதில் பேசிய உள்துறை அமைச்சர்:- தேர்தல் பிரச்சாரத்திற்காக நாங்கள் இங்கு வந்தபோது, அனுமதி மறுக்கப்பட்டன, கட்டிடங்கள் இடிக்கப்பட்டன மற்றும் தவறான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  40 க்கும் மேற்பட்ட பாஜக தொழிலாளர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர், ஆனால் இத்தனைக்கும் பிறகும், மம்தா பானர்ஜியால் எங்களை தடுக்க முடிந்ததா ?
https://twitter.com/AmitShah/status/1234128059264950275?s=20
மமதா பானர்ஜி எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் மோடி, குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்த போது மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். குடியுரிமை சட்ட திருத்தத்தை காங்கிரசும் இடதுசாரிகளும் இணைந்து எதிர்க்கின்றன. மேற்கு வங்கத்தில் ரெயில் நிலையங்கள் எரிக்கப்பட்டன. பாஜகவையும் சி.ஏ.ஏ வையும் மம்தாவால் நிறுத்த முடியாது. குடியுரிமையை எதிர்ப்பது, மஹாத்மா காந்தியையும், அம்பேத்கரையும் எதிர்ப்பதற்கு சமம்.
https://twitter.com/AmitShah/status/1234120486684000257?s=20
அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நாங்கள் முயற்சிக்கும் போது ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள்? மம்தாவின் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்கத்தில் வளர்ச்சிப் பணிகள் முடங்கி போய்  உள்ளன. சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிப்பதற்காக குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் குடியுரிமை வழங்குவதற்கு தான் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதை மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியால் தடுத்துவிட முடியாது என பேசினார்
                                அரசியல்
                                 March 2, 2020
                                
                                
                            
                            
														
														
														
Leave your comments here...