சுற்றுலா பேருந்தும் லாரியும் மோதிய விபத்து – 14 பேர் உயிரிழப்பு..!

Scroll Down To Discover
Spread the love

அசாம் மாநிலம் அதுஹெல்யா நகரில் இருந்து பலிஜன் நகருக்கு 45 பேர் பஸ்சில் சுற்றுலா சென்றனர். இன்று காலை 5 மணியளவில் பலிஜன் அருகே சென்றபோது மார்கரிடா பகுதியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 27 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.