சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் – விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்..!

Scroll Down To Discover
Spread the love

கேரள மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

இதில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்த 6 பயணிகள் சிக்கினர். அவர்கள் கேப்சூல் வடிவிலும், தாள் வடிவிலும் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை அதிகாரிகள் சோதனையின்போது கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 5.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

அவற்றின் மதிப்பு ரூ.3 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.