இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.நாட்டின் புலிகள் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கர்நாடகா மாநிலம் மைசூரில்பொன்விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, நாட்டில் 2022ம் ஆண்டு கணக்கெடுப்பு படி, 3,167 புலிகள் உள்ளன என்ற விவரத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 2010ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1706 புலிகள் இருந்தன. 2018ல் 2967 ஆக அதிகரித்தது. தற்போது 3167 புலிகள் உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதே நேரத்தில், உலக புலிகள் எண்ணிக்கையில் 75% இந்தியாவில் உள்ளது.
இந்தியா உள்ள புலியைக் காப்பாற்றியது மட்டுமின்றி, அது செழிக்க ஒரு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

														
														
														
Leave your comments here...