மத அடிப்படையில் காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுபடுத்தியதால் தான், குடியுரிமை சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – உள்துறை அமைச்சர் அமித்ஷா

அரசியல்

மத அடிப்படையில் காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுபடுத்தியதால் தான், குடியுரிமை சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – உள்துறை அமைச்சர் அமித்ஷா

மத அடிப்படையில் காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுபடுத்தியதால் தான், குடியுரிமை சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – உள்துறை அமைச்சர் அமித்ஷா

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அசாம் மாநிலம் கவுகாத்தியில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாணவர் சங்கத்தினர், தீப்பந்தங்களை ஏந்தி அணிவகுப்புகளை நடத்தினர். இதேபோல மாநிலத்தின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. சிவாசாகர் பகுதியில் நிர்வாணப் போராட்டம் நடத்தியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.அசாம் மற்றும் அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மணிப்பூர் தலைநகர் இம்பாலிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் குடியுரிமை மசோதா, நாட்டின் மதசார்பற்ற தன்மைக்கு எதிரானது என்பதால், நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்போம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அதேநேரேத்தில் 545 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில், பாஜகவுக்கு 303 எம்.பி.க்கள் இருப்பதால், மசோதா எளிதாக நிறைவேறி விடும்…

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவை தாக்கல் செய்து விவாதிக்க 293 பேர் ஆதரவு தெரிவித்தனர். 82 பேர் எதிராக ஓட்டளித்தனர்

இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா:- குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எந்த மதத்திற்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது அல்ல. மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை. பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட 6 மத அகதிகள் குடியுரிமை பெற இந்த மசோதா அனுமதி அளிக்கும்.

இந்த அகதிகள், குடியுரிமை பெறுவதற்கு அவர்களின் பெற்றோர் பிறந்த இடம் தொடர்பான ஆதாரம் தர வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து 6 ஆண்டுகள் தங்கியிருந்தால் குடியுரிமை பெற முடியும். மசோதா தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து அதனைக்குறித்து விளக்கம் அளித்து உரையாற்றினார்.  அதனை தொடர்ந்து மக்களவையில் நடைபெற்ற குடியுரிமை சட்டதிருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 311 பேரும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.  இதனையடுத்து மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா வெற்றிகரமாக  நிறைவேற்றப்பட்டது

Leave your comments here...