உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி – 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பதக்கம் – நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

Scroll Down To Discover
Spread the love

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். 19 ஆண்டுகளுக்குப் பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பதக்கம் வென்றது இந்தியா. 2003ம் ஆண்டு அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்ற பிறகு 19 ஆண்டுகளாக இந்தியா பதக்கம் பெறாமல் இருந்தது. உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; இது திறமையான வீரர் மூலம் கிடைத்த சிறப்பான வெற்றி. உலக ஷாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துக்கள். நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றது இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு சிறப்பான தருணம் என புகழாரம் சூட்டினார்.