கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின விழா கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
மே தின விழா கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில் எவ்வித திட்டங்களையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவையும் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழாவை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தபின் மின்வெட்டு அதிகரித்துள்ளது விவசாயிகள் தொழிலாளர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்வெட்டு வரும் என நாங்கள் பலமுறை எச்சரித்தும் திமுக அரசு சரியான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளாததால் தற்பொழுது மின் வெட்டு காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை. தொழிற்சாலைகள் சரியாக செயல்படாததால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி இன்று கடுமையான விலைவாசி ஏறி விட்டது எனவும் கட்டுமான பொருட்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது எனவும் இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஆனால் சிமெண்ட் விலை உயர்வின் காரணத்தினால் நாளொன்றுக்கு திமுக அரசுக்கு 1500 கோடி கமிஷன் செல்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.

														
														
														
Leave your comments here...