மாற்று திறனாளிகளுக்கான சிறந்த சேவைக்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது நேற்று இந்திய ஜனாதிபதி அவர்களின் திருக்கரங்களால் தென்காசி “ஆய்குடி ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஆய்க்குடி ராமகிருஷ்ணனுக்கு சிறப்பான வரவேற்பு மதுரையின் அட்சய பாத்திரம் மற்றும் பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு சார்பில் அளிக்கப்பட்டது
தென்காசி மாவட்டம் ஆய்க் குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 68) இவர் பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கும்போது 1975ல் கடற்படை உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டார் அங்கு அவருக்கு முதுகுத் தண்டில் அடிபட்டு அதன் பிறகு கழுத்துக்கு கீழ் செயல்படாத நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து டாக்டர் அமர் என்பவரின் உந்துதலால் தென்காசி அருகே ஆய்க்குடி கிராமத்தில் 1981ம் ஆண்டு அமர்சேவா சங்கம் தொடங்கினார். ஆரம்பத்தில் 4 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட அமர்சேவா சங்கம் தற்போது 300க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்கான புத்தகம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் 4000 பேர் பயிலும் சிவ சரஸ்வதி வித்யாலயா உட்பட பல்வேறு பணிகளை அவர் செய்து வருகிறார்.
இவரது பல்வேறு சமூக சேவைகளை பாராட்டி. தமிழக , மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளார். மாற்று திறனாளிகளுக்கான சிறந்த சேவையை பாராட்டி குடியரசுத்தலைவரால், “பத்மஸ்ரீ விருது நேற்று டெல்லியில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு வந்த “பத்மஸ்ரீ” விருது பெற்ற ஆய்குடி ராமகிருஷ்ணை மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் மற்றும், பாரதி யுவ கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு மாலை அணிவித்து காஞ்சி மகா பெரியவரின் திருஉருவ படத்தினை வழங்கினார்.
இது ஆய்க்குடி ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது மாற்று திறனாளிகளுக்கான சிறந்த சேவைக்காக குடியரசு தலைவர் பத்மஸ்ரீ விருது வழங்கியது பெருமையளிக்கின்றது.
பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் என்னிடம் பேசியது மகிழ்ச்சி மற்றும் உற்சாகமளிக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மாற்று திறனாளிகளுக்கான துறையை தனது பொறுப்பில் வைத்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் ரயில்நிலையங்கள் பேருந்து நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை மற்றும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூறினார். பிறகு ஆய்க்குடி ராமகிருஷ்ணன் மதுரையிலிருந்து புறப்பட்டு தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி கிராமத்திற்கு சென்றார்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...