மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு தங்க மேற்க்கூரை, கல்லிலான மண்டபம் அமைக்கவேண்டும் – அறநிலையத்துறை அமைச்சரிடம் பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி கோரிக்கை.!

Scroll Down To Discover

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில். அம்மன் புற்று வடிவில் சுயம்புவாக தோன்றி காட்சி அளிப்பது இக்கோயிலின் சிறப்பு. இக்கோயிலின் மாசி கொடை விழாவின்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி புனிதப்யாத்திரையாக வந்து அம்மனை தரிசிப்பார்கள். பின்னர் இருமுடியில் கொண்டுவரும் பொருட்களில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.

இந்நிலையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த 2-ம் தேதி காலை 7 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் கோவில் கருவறை மீதுள்ள பழமையான ஓட்டுக்கூரை முழுவதும் தீப் பிடித்து சேதமடைந்தது. இதுகுறித்து மண்டைக்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.மேலும் விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் , சட்டமன்ற உறுப்பினர்கள் எம்ஆர்.காந்தி, பிரின்ஸ், விஜயதாரணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே.சேகர்பாபு அவர்களை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்.காந்தி சந்தித்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு தங்க மேற்க்கூரை அமைக்கவும், கல்லிலான மண்டபம் அமைக்கவும் கோரிக்கை அளித்தார். மேலும் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விரைவாக நடத்தவும் கோரிக்கை அளித்தார்.