முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பூசி முகாம்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றம் மன்னாடிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தமிழக அரசின் உத்தரவின்படி, கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முள்ளிப்பள்ளம் ஊராட்சி வளாகத்தில் நடந்த முகாமிற்கு ஊராட்சித் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கேபிள் ராஜா துவக்கி வைத்தார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செல்வராஜ் தலைமையில் மருத்துவ குழு செவிலியர்கள் 45 வயதிற்கு மேற்பட்ட 200 பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

இதில், ஊராட்சி செயலாளர் மனோபாரதி, வார்டு உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், மேற்பார்வையாளர் சேஷாத்ரி ஜெய்ராஜா மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.

செய்தி: Ravi Chandran