தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக் குறையை போக்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வெளிமாநிலங்களில் உள்ள ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை வெளிமாநிலத்தில் உள்ள ஆக்சிசன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு ஆக்சிஜன் நிரம்பிய பின் ரயில்கள் மூலமாக தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
அதேபோல், இன்று மதுரை விமான நிலையத்திற்கு 24 ஆயிரம் கிலோ கொள்ளளவு கொண்ட 3 காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகள்  கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது,
 கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் உள்ள ஆக்சிசன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லவதற்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்ட லாரிகள் அங்கு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யக் கூடிய ஆக்சிஜனை நிரப்பிய பின் மீண்டும் ரயில் மார்க்கமாக டேங்கர் லாரிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, இதுவரை மதுரையில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் ஆக்சிசன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு இதுவரை 9 டேங்கர் லாரிகள் கொண்ட செல்லப்பட்டது குறிப்பிடதக்கது. மொத்தம் 12 லாரிகள் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டது.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...