கொரோனா எதிரான போரில் இந்திய ரயில்வே ஆற்றிய பங்கை வரலாறு நினைவில் கொள்ளும் – பியூஷ் கோயல் பெருமிதம்

Scroll Down To Discover
Spread the love

ரயில்வே மண்டலங்களின் செயல்பாடுகளை மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்த மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், கொவிட்டுக்கு எதிரான போரில் இந்திய ரயில்வே ஆற்றிய மகத்தான பங்கை வரலாறு நினைவில் கொள்ளும் என்றும் விநியோக சங்கிலிகளை பராமரித்ததோடு, வளர்ச்சியின் சக்கரங்கள் வேகமாக சுழன்றதை ரயில்வே உறுதி செய்ததாகவும் கூறினார்.

கடந்த 14 மாதங்களாக அதிக வலிமையையும், தேவைகளை பூர்த்தி செய்யும் திறனையும் ரயில்வே வெளிப்படுத்தியதாக அவர் கூறினார். இதுவரை இல்லாத அளவில் வழங்கப்பட்டுள்ள முதலீட்டு செலவின ஒதுக்கீடுகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.

உள்கட்டமைப்பு பணிகளை நிறைவு செய்வதன் மூலம் தற்போதைய சவாலான கொவிட் காலகட்டத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். தேசத்திற்கு சேவையாற்றும் போது தங்களது இன்னுயிரை இழந்த ரயில்வே பணியாளர்களுக்கு நாடு நன்றிக்கடன் பட்டிருப்பதாக கூறிய அமைச்சர் அவர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மிகவும் சிறப்பான முறையில் நாட்டுக்கு சேவையாற்றி வருவதாக கூறிய கோயல், கொவிட்டுக்கு எதிரான போரில் இது முக்கிய திருப்புமுனையாக அமைந்ததாக குறிப்பிட்டார். சேவையின் வேகமும் தரமும் அனைவராலும் பாராட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். முன் களப்பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றினர் என்றும் அமைச்சர் கூறினார். சிறப்பான திறனை வெளிப்படுத்தி சரக்கு போக்குவரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை ரயில்வே எட்ட உறுதி செய்ததற்காக அதிகாரிகளை அவர் பாராட்டினார்.