கொரோனா அச்சுறுத்தலை துணிவுடன் எதிர்கொள்ளவும், மக்கள் மனதில் நேர்மறை எண்ணத்தை விதைத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், ‘நேர்மறை எல்லையில்லாதது’ என்ற தலைப்பில், ‘ஆன்லைனில்’ தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: கொரோனா முதல் அலை பரவிய போது, அதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை, மக்கள் முழுமையாக பின்பற்றினர். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிப்பதை அரசு நிர்வாகமும் கண்காணித்து உறுதி செய்தது. முதல் அலை பரவல் குறைந்ததும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதில், மக்கள் மட்டுமின்றி, அரசு நிர்வாகமும் அலட்சியம் காட்டியது. இதனால் தான் இரண்டாவது அலை தீவிரமாக பரவியுள்ளது.
மூன்றாவது அலை பற்றியும் பேசப்படுகிறது. இதற்கு நாம் பயப்படக் கூடாது. நாம் ஒற்றுமையாக எழுந்து நின்றால் கொரோனா சவால்களை முறியடித்து விடலாம். நம்பிக்கையுடன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், கொரோனாவை வென்று விடலாம். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வதை விடுத்து, தொற்றிலிருந்து விடுபட அனைவரும் முயற்சிக்க வேண்டும். தைரியத்தை கைவிடாமல் உறுதியாக இருந்தால் நெருக்கடியிலிருந்து விரைவில் மீள்வோம்.இவ்வாறு அவர் பேசினார்
Leave your comments here...