எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை – யோகி ஆதித்யநாத்
- April 25, 2021
- : 750
- Oxygen

மராட்டியம் உத்தரப்பிரதேசம், டெல்லி மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிகக் கடுமையான அளவில் உள்ளது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. பல மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும், தடுப்பூசித் தட்டுப்பாடும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் எந்த மருத்துவமனையில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில், “ உத்தரப்பிரதேசத்தில் எந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதே கிடையாது.
தற்போது பிரச்சினை என்னவென்றால், ஆக்சிஜனை பதுக்குவதும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும்தான்,அதை இரும்புக்கரம் கொண்டு முடிவுக்கு கொண்டு வருவோம். முதல் அலையோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொரோனா 2-வது அலையில் பாதிப்பு 30 மடங்கு அதிகரித்துள்ளது” என்றார்.
Leave your comments here...