வாடிப்பட்டியில் மின்னனு வாக்குபதிவு செய்முறை விளக்கம்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தேர்தல்பிரிவு சார்பாக வரும் சட்டமன்றதேர்தலில் மின்னனுவாக்குபதிவுசெய்யும் முறை பற்றி செய்முறை விளக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

இந்த பிரச்சாரத்தை தேர்தல்அதிகாரி ஜெஸ்டின் ஜெயபால்,உதவி தேர்தல்அதிகாரி தாசில்தார் பழனிக்குமார் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் மண்டலதுணைதாசில்தார் திருநாவுகரசு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். வருவாய் ஆய்வாளர்
சஞ்ஜிவீநாதன் முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் வரவேற்றார். கிராம உதவியாளர்கள் வளர்மதி, ஜெயகுமார், அழகர், சண்முகவேல், புஷ்பம் ஆகியோர் கலந்துகொண்டு புதிய வாக்காளர்களுக்கு மின்னனு இயந்திரம் மூலம் வாக்குபதிவு செய்யும்முறை பற்றி விளக்கிகூறி பயிற்சியளித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.