அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் பறக்கும் படை சோதனையில் ரூ 2 லட்சம் சிக்கியது.!

Scroll Down To Discover
Spread the love

அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் வாகன சோதனையில் 2லட்சம் சிக்கியது. திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் தேர்தலை முன்னிட்டு வருவாய் மற்றும் காவல்துறை சார்பாக காரியாபட்டி, நரிக்குடி திருச்சுழி பகுதியில் வாகனங்களை சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பறக்கும் படை தாசில்தார் பால்ராஜ் தலைமையில் கல்லூரணியில் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரு 2 லட்சம பறிமுதல் செய்து திருச் சுழி தாசில்தாரி சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

செய்தி: Ravi Chandran