25 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச 2 ஜிபி டேட்டா கார்டு – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திட்டத்தை துவக்கி வைத்தார்.!

Scroll Down To Discover
Spread the love

கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் தடையில்லாமல் படிப்பதற்காக, விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் அரசு கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழிநுட்பக் கல்லூரிகள் என மொத்தம் 44 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 25 ஆயிரத்து 822 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை, சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவச டேட்டா கார்டுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.